சற்று நிம்மதி.....13 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

In India, 12,830 people have been newly infected with corona in the last 24 hours

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,830 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 446 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,73,300 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,830 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1300 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,42,73,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 446 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,58,186 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 14,667 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,55,842 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,59,272 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 1,06,14,40,335 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த ஒரே நாளில் 61,99,429 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.