மும்பை அதிர்ச்சி சம்பவம் : நள்ளிரவு தர்பூசணி சாப்பிட்ட குடும்பம்...அதிகாலையில் மரணம்?

மும்பையில் பிரியாணி விருந்துக்குப்பின் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி

Hero Image

மும்பை : பைதோனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்கள் தந்தை அப்துல்லா, தாய், மற்றும் அவர்களது இரு மகள்கள். நேற்று இரவு உறவினர்களுடன் சேர்ந்து சிக்கன் பிரியாணி (புலாவ்) சாப்பிட்ட பிறகு, நள்ளிரவில் குடும்பத்தினர் மட்டும் தர்பூசணி பழம் சாப்பிட்டுள்ளனர்.

அதிகாலையில் அவர்களுக்கு கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நால்வரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணி சாப்பிட்ட உறவினர்கள் அனைவரும் நலமாக இருப்பதால், போலீசார் தர்பூசணியே உணவு நச்சு (food poisoning) ஏற்படுத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். கோடை காலத்தில் வெட்டி வைக்கப்பட்ட பழங்கள், பழைய உணவுகள் ஆகியவற்றில் உணவு நச்சு ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மும்பை போலீசார், தர்பூசணியின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மருத்துவமனை விசாரணை மற்றும் உடல் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் முழு உண்மையும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.