சமூக வலைத்தளங்களில் தினம் தினம் ஏதேனும் வேடிக்கையான நிகழ்வுகள் கொண்ட வீடியோ வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது காட்டுக்கே ராஜா என அழைக்கப்டும் கம்பீரமான சிங்கம் ஒன்றை தெரு நாய் கூட்டங்கள் துரத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
குஜராத்தின் கிர் சோம்நாத்தில் ஒரு கிராமத்திற்குள் சிங்கம் ஒன்று இரவில் நுழைந்தது. கிராம வீதிகளில் அலைந்து கொண்டிருந்த அந்த சிங்கம் அருகிலேயே நின்று கொண்டிருந்த பசுக்களின் மந்தை நோக்கி ஓடியது.
unknown nodeஅப்போது அந்த சிங்கத்தை பார்த்த அங்கிருந்த தெருநாய் கூட்டங்கள் மிகவும் தைரியத்துடன் குரைத்து கொண்டு சிங்கத்தை நோக்கி ஓடி அந்த சிந்தை விரட்டியது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown nodeவீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர் ” ஆனால் அதே சூழ்நிலையில் சிறுத்தை இருந்தால் என்ன நடந்திருக்கலாம்? என பதிவிட்டுள்ளார். மற்றோருவரும் ” அது ஒரு புலியாக இருந்திருந்தால் நிலைமை முற்றிலும் வேறுபட்டதாக இருந்திருக்கும்” என கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
unknown node