விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை: உடன்பாடு எட்டப்படுமா?

Delhi: The 11th round of talks between farmer leaders and the Central govt, begins in Vigyan Bhawan

டெல்லியில் இன்று மத்திய அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.ஆனால் பல முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது.ஆனால் திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய அமைப்புகள் உறுதியாக உள்ளன.கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ,இதில் வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, வேளாண் சட்டங்களை 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயாராக இருக்கிறோம் என்றும் அதற்காக தனியாக குழு அமைத்து அவர்களுடன் கலந்தாலோசித்து தீர்வு காணலாம் எனவும் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

இந்நிலையில் டெல்லியில்  உள்ள விக்யான் பவனில்  மத்திய அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.இந்த பேச்சுவார்த்தையில் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் ,மத்திய அமைச்சர்கள் நரேந்தர் சிங் தோமர்,பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.