நாடு முழுவதும் ஒரே நாளில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு...!

Corona affects 30,773 people across the country in a single day ...!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,773 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 309 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,34,48,163 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 30,773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,34,48,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 309 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,44,838 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,945 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,26,71,167 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,32,158 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 80,43,72,331 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்,85,42,732 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.