நீண்ட நாட்களுக்கு பிறகு...11 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

After long days ... less than 11 thousand daily corona affected ..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,423 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 443 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,96,237 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 10,423 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 2000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,42,96,237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 443 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,58,880 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 15,021 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,83,581 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,53,776 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 1,06,85,71,879 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.