#Election Breaking: மேற்குவங்கம், அசாமில் 11 மணி நிலவரப்படி 24 சதவீத வாக்குகள் பதிவு!

Preliminary elections are underway in West Bengal and Assam. As of 11 am, Assam had 24.48 percent votes and West Bengal 24.61 percent.

மேற்குவங்கம், அசாம் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும்  நிலையில், காலை 11 மணி நிலவரப்படி அசாமில் 24.48 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் 24.61 சதவீத வாக்குகள் பதிவானது.

மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்கத்தில் உள்ள 30 தொகுதிகளில் மொத்தமாக 191 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் போட்டியிடுகினறனர். இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் 73 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 10,288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், கொரோனா பரவல் காரணமாக வாக்களர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கையாளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி அசாமில் 24.48 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் 24.61 சதவீத வாக்குகள் பதிவானது.