ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை!

ரம்ஜான் அன்று மதுரை பள்ளிவாசலில் 2 மணிநேரம் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ரம்ஜான் அன்று மதுரை பள்ளிவாசலில் 2 மணிநேரம் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், வரும் 25 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால், ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வீட்டிலே நடத்துமாறு முஸ்லீம் சங்க தலைவர் தெரிவித்தார்.

இந்நிலையில், மே 25 ஆம் தேதி, ரம்ஜான் அன்று மதுரை பள்ளிவாசலில் காலை 9 மணிமுதல் 11 மணிவரை 2 மணிநேரம் தொழுகை நடத்த அனுமதிக்குமாறு மதுரை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதனை விவாதித்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறினார்கள். மேலும், அந்த வழக்கை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது

ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை!