மாரியப்பனின் சாதனை பயணம் தொடர வாழ்த்துக்கள்.
கடந்த 2016 பிரேசில் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மா உட்பட 5 பேருக்கு உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாரியப்பனுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிற நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘தங்கப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பாரா ஒலிம்பிக் வீரர் திரு.மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு விளையாட்டு துறையின் உயரிய விருதான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. மாரியப்பனின் சாதனை பயணம் தொடர வாழ்த்துக்கள்.’ என தெரிவித்துள்ளார்.
unknown node