தந்தை -மகன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் தந்தை -மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ எடுக்கும்வரை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தற்காலிகமாக விசாரிப்பார் என்றும் மேலும் வழக்கினை இன்றே கையில் எடுக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.