முட்டை சாதாரணமான ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும் இந்த முட்டையை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடிய ஒன்று. இந்த முட்டையில் அதிக அளவில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக முட்டையின் வெள்ளைக் கருவில் வைட்டமின் பி அதிகமுள்ளது. கொலஸ்ட்ரால் கிடையாது. எனவே முட்டையின் வெள்ளைக்கருவை பலரும் சாப்பிட விரும்புவார்கள். இந்த முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடுவதால் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
எலும்புகள்
unknown nodeமுட்டையின் வெள்ளைக்கருவில் கால்சியம் அதிகளவில் நிறைந்து காணப்படுவதால் இவை நமது எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. கால்சியம் பற்றாக்குறை காரணமாக எலும்பு பலவீனமாக இருப்பவர்கள் நிச்சயம் இந்த முட்டையின் வெள்ளைக்கருவை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் எலும்புகளில் ஏற்படக்கூடிய ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகிய பிரச்சனைகளை நீக்குவதற்கும் இந்த வெள்ளை கரு உதவுகிறது.
இதயம்
unknown nodeமுட்டையின் வெள்ளை கருவை சாப்பிடுவதன் மூலமாக இதயத்தில் ஏற்படும் இரத்த உறைவு நீக்கப்படுகிறது. மேலும் இந்த வெள்ளைக் கருவில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுவதால், இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தம்
unknown nodeஇந்த முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடும் பொழுது அதில் உள்ள பொட்டாசியம் காரணமாக இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம்.
சோர்வு
unknown nodeமுட்டையின் வெள்ளை கருவில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. எனவே உடலில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படக்கூடிய சோர்வை நீக்குவதற்கும், தலைசுற்றலை மாற்றுவதற்கும் இந்த முட்டை சாப்பிடுவது பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் காரணமாக உடல் சோர்வை நீக்க இது உதவுகிறது.
தசைகள்
unknown nodeமுட்டையின் வெள்ளைக்கருவில் புரதம் அதிகம் காணப்படுகிறது. எனவே இவை தசைகளை வலுவாக்க உதவுவதுடன், தளர்ந்த தசைகள் கெட்டியாக்கவும் உதவுகிறது. எனவே முட்டையின் வெள்ளைக்கருவை அதிக அளவில் சாப்பிடும்பொழுது தசைகள் வலுவடைய உதவுகிறது.