பெற்றோர்களே..!கொரானா மூன்றாம் அலையிலிருந்து குழந்தையை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...!

Follow the following precautions to protect children from corona 3rd wave.

கொரோனா 3 ஆம் அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பின்வரும் முன்னெச்சரிக்கை முறைகளை கடைபிடியுங்கள்.

இந்தியா முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவலானது தீவிரமடைந்துள்ள நிலையில்,மத்திய ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனா 3 ஆம் அலை பற்றிய கணிப்புகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.

அதன்படி,இந்தியாவில் கொரோனா பரவலின் 3 ஆம் இலை இன்னும் 6 முதல் 8 மாதங்களில் நாட்டில் ஏற்படலாம் என்றும்,இந்த மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

எனவே,கொரானாவின் மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றலாம்:

அந்த வகையில்,முதலாவதாக குழந்தைகளை வெளியே விடக்கூடாது.அதன்பின்னர்,குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் பழங்கள்,காய்கறிகள்,பயறு வகைகள்,குறிப்பாக: பீன்ஸ் மக்காச்சோளம், தினை, ஓட்ஸ்,கோதுமை, இறைச்சி,மீன், முட்டை மற்றும் பால் ஆகியவை பின்வருமாறு கொடுக்க வேண்டும்.

பழங்கள் மற்றும் சமைத்த காய்கறிகள்:

தினமும்,2 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு 1 கப்,4 முதல் 13 வயது வரையிலான குழந்தைகளுக்கு 1.5 – 2 கப்.14 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு 2.5 – 3 கப் கொடுக்க வேண்டும்.

புரதச்சத்து:

சால்மன்,மத்தி,கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் மற்றும் இறைச்சி ஆகியவை வாரத்திற்கு இரண்டு முறை கொடுக்க வேண்டும்.(குறிப்பு:5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இந்த முறையில் கொடுக்க வேண்டும்)

பால்:

தினமும் காலை,மாலை,இரவு என 3 வேளையும் முழு டம்ளர் அளவில் பால் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

இதர :

தினமும்,நிலவேம்பு அல்லது கபசுரக் குடிநீர் கசாயம் குறிப்பிட்ட அளவு கொடுக்க வேண்டும்.

தினமும்,இரண்டு அல்லது மூன்று லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.ஏனெனில்,தண்ணீர் குடிப்பதால்,இரத்தத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கடத்தப்பட்டு உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது.மேலும் உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது.

மீன் எண்ணெய்,வெண்ணெய்,ஆலிவ் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் போன்றவைகளில் சமைத்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

உடைகளை கிருமிநாசினியும் கல் உப்பும் கலந்த தண்ணீரில் ஊறவைத்துத் துவைத்து பயன்படுத்துங்கள்.