மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள பன்சி என்ற கிராமத்தில், போதைப் பழக்கத்தை காரணம் காட்டி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நவம்பர் 11ம் தேதி கிராம சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தடை உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ 200 அபராதம் விதிக்கப்படும் என்று கிராம சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். கொரோனா காலத்தில் அதிகப்படியான […]
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தொடக்கம். ஊட்டியில் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து தரும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார். கோவை மற்றும் உதகை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார். இதுபோன்று நேற்றைய தினம் உதகையில் 124-ஆவது மலர் கண்காட்சியை துவக்கி வைத்த அவர், இன்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடக்கி வைக்கிறார். அதில் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் […]
பேருந்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி இருக்கை பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், பேருந்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி இருக்கை பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக […]
6-12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல். இந்தியாவில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு DCGI (Drugs Controller General of India) ஒப்புதல் வழங்கியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்கும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்க கூடிய நிலையில், தற்போது அவசர கால பயன்பாடாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் […]
டெல்லியில் சாகர்பூர் பகுதியில் வசித்து வரக்கூடிய 24 வயது பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், அந்த பெண் தனது குழந்தைகளுடன் வெளியில் சென்று கொண்டிருந்தபோது ஒருவர் கத்தியால் குத்தி அவரை கொலை செய்துள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணின் பெயர் ஆர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பெண் உடல் தீன்தயாள் உபாத்யா மருத்துவமனையில் அனுப்பப்பட்ட போது, அவர்கள் இறந்து விட்டதாக உறுதி செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் […]
உத்தரப் பிரதேச மாநிலம் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முறையாக கொரோனா கட்டுப்பட்டு வழிமுறைகளை பின்பற்றுமாறு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கௌதம புத்தர் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 103 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,காசியாபாத் பகுதியில் புதிதாக 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஹாப்பூர், மீரட், புலந்த்ஷாஹர் மற்றும் பாக்பத் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் கொரோனா பரவி […]
அமெரிக்கா,இங்கிலாந்து,ஸ்பெயினில் உள்ள 1 முதல் 6 வரையிலான குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் கண்டறியப்பட்டு உள்ளது.மேலும் இது பொதுவாக சளியுடன் தொடர்புடைய ஒரு வகையான வைரஸ் ஆக இருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகளால் கூறப்படுகிறது.இந்நிலையில்,இங்கிலாந்தில் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் தொடர்பாக 74 வழக்குகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இதேபோன்று,ஸ்பெயினில் மூன்று வழக்குகள் மற்றும் அயர்லாந்தில் ஒரு சில வழக்குகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் WHO தெரிவித்துள்ளது.இதற்கிடையில்,கல்லீரலை தாக்கும் மர்ம நோய் தொடர்பான […]
சமீபத்தில் ஒரு பெண்,தனது கணவன் மற்றும் மாமியார் தனது குழந்தைகளை நான்கு நாட்களுக்கு பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளிடமிருந்து காதலை (அன்பையும்,பாசத்தையும்) பெற குழந்தைகளுக்கு உரிமை உண்டு என்றும் மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மனைவியின் அனுமதி: 38 வயதான தந்தை ஒருவர்,கடந்த 22 மாதங்களாக தனது குழந்தைகளை சந்திக்க மனைவி தன்னை அனுமதிக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.மேலும், அம்மனுவில்,குழந்தைகளின் தந்தை வழி தாத்தா உடல்நலம் பாதிக்கப்பட்டு […]
23.8% குழந்தைகள் படுக்கையில் இருக்கும்போது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று மக்களவையில் அமைச்சர் தகவல். இதுதொடர்பாக டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்த பதிலில், சுமார் 23.8 சதவீத குழந்தைகள் தூங்குவதற்கு முன் படுக்கையில் இருக்கும் போது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் 37.15 சதவீத குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் கவனம் செலுத்தும் திறன் குறைந்துள்ளதாகவும் எழுத்துப்பூர்வ பதிலில்தெரிவித்தார். குழந்தைகளின் இணைய அடிமைத்தனம் குறித்த குறிப்பிட்ட தகவல் எதுவும் இல்லை, […]
தமிழகத்தில் வரும் 27-ம் தேதி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் என அறிவிப்பு. தமிழகத்தில் வரும் 27-ம் தேதி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் என்றும் பள்ளிகளிலும் முகாம்கள் நடைபெறுகிறது எனவும் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். கொரோனா சூழல் காரணமாக ஜனவரி 23-ஆம் தேதி நடைப்பெறவிருந்த போலியோ சொட்டுமருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம் செய்து மத்திய அறிவித்திருந்த […]
15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி முன்னதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட https://www.cowin.gov.in/ COWIN செயலியில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என கோவின் தலைவர் ஷர்மா தெரிவித்த நிலையில்,இதற்கான முன்பதிவு கோவின் […]
பல்கேரியா நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகியத்தில் குழந்தைகள் உட்பட 45 பேர் பலியாகியுள்ளனர். பல்கேரியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள சோபியா எனும் நகரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்துக்கு பின் பேருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இந்த விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் மீட்கப்பட்டு சோபியா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
மேற்கு வங்கத்தில் கடுமையான சுவாச பிரச்சனை மற்றும் காய்ச்சலால் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமே தற்பொழுது வரை குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு குழந்தைகள் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி என்னும் மாவட்டத்தில் கடுமையான சுவாசப் பிரச்சனை மற்றும் காய்ச்சல் காரணமாக […]
ஆப்கன் குழந்தைகளும் நமது குழந்தைகளே என்று நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். வன்முறை அபாயத்தில் இருக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதில் பல ஆண்டுகள் பணியாற்றியதற்காக 2014 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற சத்யார்த்தியை, ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெள்ளிக்கிழமை அன்று எஸ்டிஜி வழக்கறிஞராக நியமித்தார். இந்நிலையில் கைலாஷ் சத்யார்த்தி தற்போது தெரிவித்துள்ளதாவது, தலிபான் ஆட்சியின் கீழ் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், ஆப்கானிஸ்தான் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் […]
ஆப்கானிஸ்தானில் போதிய உணவின்றி 1 கோடி குழந்தைகள் தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் நாட்டிலிருந்த பிற நாட்டை சேர்ந்த மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் போதிய அளவு உணவு, மருந்து மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இது […]
மேற்கு வங்கத்தில் சுவாச பிரச்சனை மற்றும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனை காரணமாக 60 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், ஏற்கனவே சுமார் 200 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பல பகுதிகளிலும் தொடர்ந்து இது போன்று குழந்தைகள் சுவாசப் பிரச்சனை இருமல், சளி, காய்ச்சல் ஆகியவற்றால் குழந்தைகள் […]
கொல்கத்தாவிலுள்ள ஜல்பைக்குரி மருத்துவமனையில் தினமும் 40 முதல் 50 குழந்தைகள் வரை உடல்நல குறைவால் அனுமதிக்கப்படுவதாக சுகாதர அதிகாரி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஜல்பைகுரி என்னும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல வார்டில் கடந்த நான்கு நாட்களாக தினமும் 40 முதல் 50 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கூடிய 90 சதவீத குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா […]
சீனாவில் 18 வயதிற்குட்பட்டவர்கள் வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் விளையாட முடியும் என சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன்கள் தவழுகிறது. அந்தவகையில் பெரும்பாலானோரின் பொழுதுபோக்கு பூங்காவாக இருப்பது இணையதளங்கள் தான். தங்களது அதிகமான நேரத்தை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் இணையதளங்களில் தான் செலவிடுகின்றனர். தற்போதைய சூழலில் குழந்தைகள் முதல் ஒரு குறிப்பிட்ட வயது வரை உள்ள இளைஞர்கள் […]
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 136 மாணவர்கள் தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த மே மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களை பணம் கொடுத்து, மீட்டுக் கொள்ளும் படியாக பயங்கரவாதிகள் தெரிவித்திருந்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் அந்ததொகை போதுமானதாக இல்லை என பயங்கரவாதிகள் வாங்க மறுத்துள்ளனர். இதனையடுத்து தற்போது கடத்தப்பட்ட 136 மாணவர்களையும் பயங்கரவாதிகள் விடுவித்து விட்டதாக […]
குழந்தைகள் கொரோனா மூன்றாம் அலையில் பாதிக்கப்பட சாத்தியமில்லை என மருத்துவர் திரேன் குப்தா கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை அக்டோபரில் உச்சம் தொடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் குழந்தைகள் நுரையீரல் நிபுணர் டாக்டர் திரேன் குப்தா […]