உயர் ரத்த அழுத்தம் தற்பொழுது உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் கணக்கான மக்களுக்கு உள்ள ஒரு மிகப் பெரிய பாதிப்பாக உள்ளது. இந்த உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதன் காரணமாக பலர் குறைந்த வயதில் சீக்கிரமாகவே உயிரிழக்க நேரிடுவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
இதை கண்டறிந்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால் மருத்துவத்தில் மட்டுமல்லாமல் இயற்கையான முறையிலும் சரி செய்யலாம். அதற்கான சில வழிமுறைகளை நாம் இன்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
சோடியம் உட்கொள்ளுதலை குறைத்தல்
unknown nodeசாதாரணமாகவே மனிதர்கள் ஒரு நாளுக்கு 2,300 மில்லி கிராமுக்கு மேல் சோடியம் பயன்படுத்தக் கூடாதாம். அதிகப்படியான சோடியம் உட்கொள்வதால் உயர் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாம். மேலும் சோடியம் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உட்கொள்ளும் பொழுது பக்கவாதம் ஏற்படுவதற்கு காரணமாகவும் அமையுமாம். எனவே தினமும் நமது உணவுகளில் சோடியம் உட்கொள்ளுதலை குறைத்துக் கொள்ளும் பொழுது இரத்த அழுத்தத்தை 5 முதல் 6 மில்லி மீட்டர் வரை குறைக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக உப்பில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது.
பொட்டாசியம் உட்கொள்ளுதலை அதிகரித்தல்
unknown nodeஉயர் இரத்த அழுத்தத்துடன் போராடக்கூடிய மக்கள் பொட்டாசியம் சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த பொட்டாசியத்தை அதிகளவு நாம் சேர்த்துக் கொள்ளும் பொழுது, இது நரம்பில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுகிறது. எடுத்துக்காட்டாக பச்சை இலைக் காய்கறிகள், தக்காளி, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஆரஞ்சு, வாழைப்பழம், பாகற்காய், தயிர், வெள்ளை பீன்ஸ் போன்றவற்றில் அதிக அளவில் பொட்டாசியம் காணப்படுகிறது.
உடற்பயிற்சி
unknown nodeஒவ்வொரு மனிதனுமே தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வழக்கமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இந்த உடற்பயிற்சி நமது இதயத்தை வலுப்படுத்த உதவுவதுடன் தமனிகளில் இருக்கக்கூடிய அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உதவுகிறது. மேலும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம்
unknown nodeஇரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளில் 16 சதவீதத்தினர் குடிப்பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக தான் இருக்கிறார்களாம். எனவே இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் புகைபிடிப்பதையும், குடிப்பதையும் தவிர்ப்பது நல்லது.