Garlic -தினமும் ஒரு பள்ளு பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பூண்டை பச்சையாக சாப்பிடும் போது பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது .பூண்டை நசுக்கி ஐந்து நிமிடம் காற்றோட்டமாக வைக்க வேண்டும் .அவ்வாறு வைக்கும் போது அதில் உள்ள ரசாயனம் காற்றுடன் வினை புரியும், பிறகு அதை உமிழ் நீருடன் மென்று சாப்பிடும் போது அதன் முழு பலனையும் பெற முடியும் . நன்மைகள் ; பூண்டில் ஆலசின் என்ற […]
Millets- சிறு தானியங்களில் உள்ள சத்துக்கள் ,சாப்பிடும் முறை, யாரெல்லாம் சாப்பிட கூடாது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் தினமும் சாப்பிடும் அரிசி கோதுமை தானிய வகைகளைச் சார்ந்ததாகும் .சிறுதானியங்கள் என்பது சிறு விதைகளாக இருக்கும். ஏழு வகை சிறுதானியங்கள் உள்ளது கம்பு ,ராகி, திணை, சாமை, வரகு ,குதிரைவாலி ,சோளம் போன்றவை ஆகும். சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள்; அரிசியைவிட சிறு தானியங்களில் புரதம், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அதிகம் உள்ளது […]
இன்று பெருமாம்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் இரத்த முளைத்த பிரச்னை ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இரத்த அழுத்தம் என்பது இதயம் இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்தும்போது, தமனிகளில் ஏற்படும் அழுத்ததின் காரணமாக இந்த பிரச்னை ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் உயர் இரத்த அழுத்த பிரச்னை வயது அதிகரிக்கும் போது ஏற்படுகிறது. அதே சமயம் உங்கள் […]
உயர் ரத்த அழுத்தம் தற்பொழுது உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் கணக்கான மக்களுக்கு உள்ள ஒரு மிகப் பெரிய பாதிப்பாக உள்ளது. இந்த உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதன் காரணமாக பலர் குறைந்த வயதில் சீக்கிரமாகவே உயிரிழக்க நேரிடுவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இதை கண்டறிந்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால் மருத்துவத்தில் மட்டுமல்லாமல் இயற்கையான முறையிலும் சரி செய்யலாம். அதற்கான சில வழிமுறைகளை நாம் இன்று தெரிந்துகொள்வோம் வாருங்கள். சோடியம் […]
முந்திரி பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள். நாம் அன்றாடம் பயன்படுத்து அனைத்து இயற்கையான பொருட்களிலும், உடலுக்கு தேவையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளது. தற்போது, பருப்பு வகைகள் அனைத்துமே உடல்நலனுக்கு ஏற்றவையாகும். அந்த வகையில் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். செரிமானம் இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது முந்திரி பருப்பு. முந்திரி பருப்பை […]
பாசிப்பயறில் உள்ள நன்மைகளும், அதில் உள்ள மருத்துவ குணங்களும். தானிய வகைகள் அனைத்துமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. ஆனால் நாம் இன்று அனைத்தையும் மறந்து, மேலை நாட்டு உணவு முறைகளை தான் கையாண்டு வருகிறோம். இன்றைய நாகரீகமாக கருதும், மேலை நாட்டு உணவு முறைகள் நமது உடலில் பல நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த நோய்கள் நமது உயிருக்கு உலை வைக்கும் நோயாகவே மாறி விடுகிறது. பாசி பயறு இன்று நாம் இந்த […]
சின்ன வெங்காயத்தில் உள்ள வியக்கவைக்கும் சிறப்பான மருத்துவ குணங்கள். சின்ன வெங்காயத்தாள் குணமாக்கும் நோய்கள். நமது அன்றாட வாழ்வில்,நமது சமையல்களில் சின்ன வெங்காயம் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. நமது அனைத்து உணவுகளிலும் சின்ன வெங்காயம் ஒரு முக்கியமான பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சின்ன வெங்காயம் இது அளவில் சிறியதாக இருந்தாலும், இதில் உள்ள சத்துக்களும் மருத்துவ குணங்களும் அதிகமாக காணப்படக்கூடியது. சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் […]
தினமும் இரவு உறங்குகையில் நாம் அமைதியாக கண்ணுயர்ந்து ஓய்வு எடுக்கையில், நம் உடலின் உள்ளுறுப்புகள் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கின்றன; நமது உடலின் அன்றைய நாள் கழிவுகளை நீக்கி, அடுத்த நாளுக்காக நம்மை தயார் செய்ய, உடல் உள்ளுறுப்புகள் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி இரவிலும் உழைக்கும் உள்ளுறுப்புகளுக்கு நாம் ஒவ்வொருவரும் உதவ வேண்டுமல்லவா! அது எப்படி என விளக்கவே இப்பதிப்பு. என்ன உதவி? நாள்தோறும் பல மாசுக்கள், புழுதிகள், கிருமிகள் நம்மை தாக்கும் வண்ணம் […]
சீத்தாப்பழத்தில் உள்ள மருத்துவகுணங்கள். உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும்சீத்தாப்பழத்தைமருத்துவகுணங்கள். நம் அனைவருக்கும் பழவகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். அனைத்து பழ வகைகளும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. சீத்தாப்பழம் தற்போது இந்த பதிவில், சீத்தாப்பழம் பற்றியும், அதன் ஆரோக்கியத்தை பற்றியும், அதன் மருத்துவ குணங்களையும் பற்றி பார்ப்போம். சீத்தாப்பழம் வைட்டமின்-சி, பி-காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து, வைட்டமின்-ஏ, நார்ச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் முதலான ஊட்டச்சத்துக்கள் கொண்டது. ஆஸ்துமா ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு சீத்தாப்பழம் […]
துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. துரியன் பழம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு, பல நோய்களை குணப்படுத்துகிறது. நாம் அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை உண்கிறோம். அனைத்து பழங்களும் நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆரோக்கியத்தை அளிக்கிறது. பழங்கள் நமது உடலில் உள்ள நோய்களை இயற்கையான முறையில் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்களை சாறாக குடிப்பதை விட மென்று சாப்பிடுவது நல்லது. துரியன் பழம் துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. நறுமண வாசனையுடன் கூடிய […]
நாம் நம் அன்றாட வாழ்வில் பல வகையான கிழங்குகளை பார்த்திருப்போம். பல வகையான கிழங்குகளை சாப்பிட்டு இருப்போம். ஒவ்வொரு கிழங்குகளும் பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல வகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. வாழை கிழங்கு வாழை மரத்தில் பழம், பூ, தண்டு, இலை, காய் என எல்லாவற்றுக்கும் மருத்துவப் பயன்கள் இருப்பதை அறிவோம். அதுபோல வாழை மரத்தில் வேர் பகுதியில் இருக்கக்கூடிய வாழைக் கிழங்கும் பல்வேறு […]
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பதுண்டு. இந்த பழத்தில் பல வகையான பழங்கள் இருக்கிறது. ஒவ்வொரு வகையான பழங்களும் பல வகையான நோய்களை குணமாக்குகிறது. சத்துக்கள் : ஒரு வாழைப்பழத்தில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்சத்து 16 சதவிகிதம், வைட்டமின் சி 15 சதவிகிதம் உள்ளது. வாழைப்பழத்தில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ […]
நமது அன்றாட வாழ்வில் டீ ஒரு முக்கியமான பானமாக மாறிவிட்டது. சிலர் காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிக்காமல், எந்த வேளையிலும் ஈடுபட மாட்டார்கள். தேநீர் குடித்தால் தான் புதிய உற்சாகமே வரும். இப்படி தேநீர் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால் எப்படிப்பட்ட தேநீர் குடித்தால் நமது உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என யாரும் அறிந்து கொள்ளுவதில்லை. இந்த வகையில் கிரீன் டீ நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்த டீ முழுமையான […]
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் என்றால் அலாதி பிரியம். சாக்லேட் என்ற ஒற்றை வார்த்தைக்கு ஒரு பெரிய கூட்டமே கூடும். அதிக அளவில் செயற்கை சர்க்கரையை சேர்க்கும் சாக்லேட்கள் நமக்கு ஒரு போதும் நன்மை தராது. கோக்கோ அதிக அளவில் உள்ள டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் பல்வேறு பயன்களை தரும். இந்த டார்க் சாக்லேட் என்ன விதமான பயன்களை தரும் என்பதை இனி அறியலாம். ஊட்டச்சத்துக்கள் இந்த டார்க் சாக்லேட்டில் நார்சத்து, இரும்புசத்து, மெக்னீசியம், […]