நம்மில் அனைவருமே வடை என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான கொண்டைக்கடலை வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 5
சோம்பு – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
கறிவேப்பிலை – 2 கொத்து
செய்முறை
முதலில் வெள்ளை கொண்டைக்கடலையை குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். பின் ஊறிய கடலையை தண்ணீரை வடித்து விட்டு காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
பின் அரைத்த கடலையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பின் இதை மசால் வடை போல வட்டமாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான கொண்டைக்கடலை வடை தயார்.