சுவையான தயிர் குருமா செய்வது எப்படி?

தயிரை பயன்படுத்தி நாம் பல வகையான  உணவுகளை செய்து  சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தயிர் குருமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தயிரை பயன்படுத்தி நாம் பல வகையான  உணவுகளை செய்து  சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தயிர் குருமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

புளித்த கெட்டி தயிர் – ஒரு கப்

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு – ஒரு கப்

பெரிய வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 5

இஞ்சி – ஒரு அங்குல துண்டு

பூண்டு – 4 பற்கள்

தனியா – அரை தேக்கரண்டி

கசகசா – அரை தேக்கரண்டி

கடுகு – தேவைக்கேற்ப

கறிவேப்பிலை – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளமாகா நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் இஞ்சியுடன் பூண்டு, தனியா, கசகசா, முந்திரி மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும்.

பின் அரைத்தவற்றை தயிருடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு வதக்கியெடுத்து, தயிருடன் சேர்த்து கலக்க வேண்டும். பின்கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்க வேண்டும்.

அத்துடன் நறுக்கிய காய்கறிகளையும், தயிர் கலவையையும் சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும். இப்பொது சுவையான தயிர் குருமா தயார்.