சுவையான இறால் ஃப்ரை செய்வது எப்படி?

நம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை பயன்படுத்துகிறோம். அந்தவகையில், மீன், இறால், நண்டு போன்ற உணவுகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே

நம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை பயன்படுத்துகிறோம். அந்தவகையில், மீன், இறால், நண்டு போன்ற உணவுகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ண கூடிய உணவுகள் ஆகும்.

தற்போது இந்த பதிவில் சுவையான என்றால் ப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

இறால் – கால் கிலோ

உருளைக்கிழங்கு – 2

இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 2

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகு, சீரகத்தூள் – 1 டீஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

எண்ணெய் – தேவைக்கேற்ப

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

இறாலை நன்கு சுத்தம் செய்த்து, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு மாறும் சீரகத்தூள், உப்பு, நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு வெந்த, நீர் வற்றி மசாலா பிரண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். பின்  கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதனையுடன் வேக வைத்த கலவையை கொட்டி 5 நிமிடம் கிளறி இறக்க வேண்டும். இப்பொது சுவையான இறால் ஃப்ரை தயார்.