வாழைப்பூ கட்லெட் இப்படி செஞ்சி பாருங்க..!

வாழைப்பூ சாப்பிடாத குழந்தைகள் கூட இப்படி சுவையாக கட்லெட் செய்து கொடுத்தால் சாப்பிடும்.

வாழைப்பூ சாப்பிடாத குழந்தைகள் கூட இப்படி சுவையாக கட்லெட் செய்து கொடுத்தால் சாப்பிடும்.

வாழைப்பூ என்றாலே குழந்தைகள் அதிகமாக சாப்பிட மறுப்பார்கள். பெற்றோர்கள் வாழைப்பூ மிகவும் ஆரோக்கியம் நிறைந்தது, இதனை சப்பிட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். மேலும் எப்போதும் போல வாழைப்பூ வாங்கினால் அதனை கூட்டு செய்து கொடுத்தால் நிச்சயமாக குழந்தைகள் அழுதுக்கொண்டே தான் பிடிக்காமல் சாப்பிடுவார்கள்.

இதனை மாற்ற எளிமையான ஒரு வழி வாழைப்பூ வைத்து கட்லெட் செய்து கொடுங்கள். குழந்தைகள் இனி வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள். அந்த அளவு கட்லெட்டை விரும்பி சாப்பிடுவார்கள். சுவையான கட்லெட் செய்ய என்னென்ன தேவையான பொருட்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:வாழைப்பூ – ஒரு கப் (பொடியாக நறுக்கியது), உருளைக்கிழங்கு – இரண்டு, வெங்காயம் – ஒன்று(பொடியாக நறுக்கியது), இஞ்சி – அரை இன்ச்(பொடியாக நறுக்கியது), பூண்டு – எட்டு முதல் 10(பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – ஐந்து முதல் ஆறு(பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகு தூள்- ஒரு டீஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கொத்து(நறுக்கியது), எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன், முட்டை வெள்ளைக்கரு – ஒன்று முதல் இரண்டு, பிரட் தூள் – கால் கப், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:முதலில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ள வேண்டும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். இப்படி 15 நிமிடம் வரை ஊறவைத்து பின்னர் அதிலிருந்து தண்ணீரை பிழிந்து விட்டு வாழைப்பூவை வேறு ஒரு கிண்ணத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும். அடுத்தப்படியாக, உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். வெந்த பின்னர் தோலுரித்து உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் உப்பு, மஞ்சள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

unknown node

அடுத்தபடியாக ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பொன்னிறமாக வதங்கிய பின்னர், இதில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இதனையடுத்து இதில் வாழைப்பூவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது வேக வைக்க வேண்டும். பின்னர் இதனை நன்கு கிளறி மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இதனுடன் எலுமிச்சை சாறு, மசித்த உருளைக்கிழங்கு, கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விட்டு பின்னர் இறக்கி விடுங்கள். தயார் செய்து வைத்துள்ள வாழைப்பூ கலவையை ஆற வைத்து விடுங்கள். பிறகு முட்டையின் வெள்ளைக்கருவில் சிறிது உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். நீங்கள் தயார் செய்து உள்ள வாழைப்பூவை சிறிய உருண்டைகளாக உருட்டி அதனை முட்டையில் நனைத்து பின்னர் பிரட் தூளில் பிரட்டி கொள்ளுங்கள்.

இதனை தட்டையாக தட்டி வைத்து கொள்ளுங்கள். இதேபோன்று அனைத்தையும் தயார் செய்து கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தயார் செய்துள்ள துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான வாழைப்பூ கட்லெட் தயார்.