ஒரு முறை இப்படி செய்து கொடுங்க... பிடிக்காதவர்களும் இனி பாகற்காய் சாப்பிடுவாங்க!

do not like cantaloupe its bitter nature. But, it has many health benefits. So let's see how to cook and eat cantaloupe in a different way.

பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது. அதற்க்கு கரணம் அதன் கசப்பு தன்மை தான். ஆனால், அதில் பல ஆரோக்கியமான நன்மைகள் உள்ளது. எனவே வித்தியாசமான முறையில் பாகற்காயை சமைத்து சாப்பிடத்தவர்களையும் சாப்பிட வைப்பது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பாகற்காய்

கடலை மாவு

சோள மாவு

தனியா தூள்

சீரகம்

மஞ்சள் தூள்

மிளகாய் தூள்

உப்பு

எண்ணெய்

செய்முறை

முதலில் பாகற்காயை வட்ட வட்டமாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். லேசாக உப்பு கலந்த நீரில் அவற்றை 2 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பின், பாகற்காயுடன் கடலை மாவு மற்றும் சோள மாவு ஆகிய இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு விட்டு, அதனுடன் தனியா தூள், மஞ்சள் தூள் லேசாக உப்பு மற்றும் காரத்திற்கு ஏற்றவாறு மிளகாய் தூள் ஆகிய சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.

இந்த கலவையை 10 நிமிடங்கள் ஊர் வைக்கவும். அதன் பின் சட்டியில் எண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்துள்ள பாகற்காய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அட்டகாசமான பாகற்காய் பொரியல் தயார். இதில் கசப்பு தெரியாது. எனவே விரும்பாதவர்களும் ஒரு முறை இதை சாப்பிட்டால் விரும்பி உன்ன தொடக்கி விடுவார்கள்.