அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை மனிதர்களின் கைகள், பாதம், முகம் என பல விஷயங்களை வைத்து அவர்தம் எதிர்காலம் கணிக்கப்படுகிறது; இது போக ஒவ்வொருவரும் பயன்படுத்தும் பொருட்கள், முக அல்லது உடல் அமைப்பு போன்ர விஷயங்களை வைத்தும் கூட அவர்களின் குணாதிசயத்தை கணித்து சொல்ல முடியும்.
இந்த வகையில், உங்கள் உதட்டின் நிறம், உங்களை பற்றி என்ன சொல்லுகிறது என்பது குறித்து இப்பதிப்பில் காணலாம்.
சிவந்த உதடுகள்
unknown nodeசிவந்த உதடுகள் கொண்ட நபர்கள் அல்லது உதட்டிற்கு சிவப்பு நிற சாயத்தை பயன்படுத்த விரும்பும் நபர்கள் பயமில்லாதவர்களாக, நட்பு மனப்பான்மை கொண்டவர்களாக, அதிக காதலை – அன்பை வெளிப்படுத்தும் நபர்களாக, சக்தி மற்றும் குறிக்கோளை அடையும் இலட்சியம் நிறைந்தவர்களாக இருப்பர் என்று உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிங்க் உதடுகள்
unknown nodeஉதட்டிற்கு பிங்க் நிறத்தை தேர்ந்தெடுக்கும் நபர்கள் அதிக அழகு கொண்டவர்களாக, அதிக அன்பு நிறைந்தவர்களாக இருப்பர் என்று கூறப்படுகிறது.
ப்ரௌன் உதடுகள்
unknown nodeஇந்த நிற உதட்டு சாயத்தை தேர்ந்தெடுக்கும் நபர்கள் மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என விரும்புபவர்களாவர்.
இயற்கை நிற உதடுகள்
unknown nodeஇயற்கை நிற உதடுகளை கொண்ட நபர்கள் மிகவும் அமைதியானவர்களாக, எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் நபர்களாக, எளிமையானவர்களாக, திறந்த மனம் கொண்டவர்களாக இருப்பர்.
கருப்பு உதடுகள்
unknown nodeஉதட்டிற்கு கருமை நிறத்தை தேர்ந்தெடுக்கும் நபர்கள் மிகவும் கடினமான மனோபாவம் கொண்டவர்களாக, அதிக அடம், பிடிவாதம் கொண்டவர்களாக இருப்பர் என கண்டறியப்பட்டுள்ளது.