சென்னை கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பல்வேறு வேலைவாய்ப்புகள்.! எழுத படிக்க தெரிந்தால் போதும்…
சென்னை கிண்டியில் புதியதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசால் அண்மையில் சென்னை , கிண்டியில் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், லேப் டெக்னீசியன், ECG டெக்னீசியன், அலுவலக உதவியாளர், மருத்துவ உதவியாளர் என பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 29-ஜூன்-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 07ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..
பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :
- டயாலிசிஸ் டெக்னீஷியன் – 15 காலிப்பணியிடங்கள்.
- ஆபரேஷன் தியேட்டர் டெக்னீஷியன் – 08 காலிப்பணியிடங்கள்.
- லேப் டெக்னீஷியன் – 15 காலிப்பணியிடங்கள்.
- மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர் – 15 காலிப்பணியிடங்கள்.
- கேத்தி லேப் (Cathy Lab) டெக்னீஷியன் -04 காலிப்பணியிடங்கள்.
- CSSD தொழில்நுட்ப உதவியாளர் – 05 காலிப்பணியிடங்கள்.
- ஈசிஜி தொழில்நுட்ப ஆபரேட்டர் – 06 காலிப்பணியிடங்கள்.
- ஆய்வக டெக்னீஷியன் (Manifold) – 08 காலிப்பணியிடங்கள்.
- உடற்பயிற்சி உதவியாளர் – 02 காலிப்பணியிடங்கள்.
- ரேடியோகிராபர் – 07 காலிப்பணியிடங்கள்.
- கணினி பதிவாளர் (Date Entry Operator) – 5 காலிப்பணியிடங்கள்.
- அலுவலக உதவியாளர் – 5 காலிப்பணியிடங்கள்.
- மருத்துவ உதவியாளர் – 100 காலிப்பணியிடங்கள்.
கல்வித்தகுதி :
- அலுவலக உதவியாளர் , மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு தமிழ் எழுதப்படிக்க தெரிந்து இருந்தால் போதும்.
- மற்ற பணிகளுக்கு அறிவிப்பில் குறிப்பிட்டபடி அங்கீகாரம் பெற்ற கல்வி மையத்தில் தேவையான படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :
- ரூ.12,000 முதல் 15,000 வரையில்.
வயது வரம்பு (அதிகபட்சம்) – குறிப்பிடப்படவில்லை.
தேர்வு செய்யப்படும் முறை :
- சான்றிதழ் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பம் தொடங்கிய தேதி – 29 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 07 ஜூலை 2023.
விண்ணப்பிக்கும் முறை :
- கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையின் அதிகாரபூர்வ தளமான www.kcssh.orgக்கு செல்ல வேண்டும்.
- அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் எந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
- பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை சேர்த்து அதனை குறிப்பிட்ட முகவரிக்கு வருகிற ஜூலை 7க்குள் வந்து சேரும்படி அனுப்பிவைக்க வேண்டும்.
- பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் பணியமர்த்தப்படுவர்.
அனுப்ப வேண்டிய முகவரி :
இயக்குனர்,
கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை,
கிண்டி,
சென்னை – 600032.