மலேரியா ஆராய்ச்சி மையத்த்தில் லேப் டெக்னீசியன், உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் ICMR-இன் கீழ் செயல்படும் தேசிய மலேரியா ஆராய்ச்சி மையத்தில் (NIMR) லேப் டெக்னீசியன், உதவியாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 23-ஜூன்-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 21ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..
பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :
தொழில்நுட்ப உதவியாளர் – 26 காலிப்பணியிடங்கள்.
லேப் டேங்கனீசியன் – 49 காலிப்பணியிடங்கள்.
ஆய்வக உதவியாளர் – 04 காலிப்பணியிடங்கள்.
கல்வித்தகுதி :
தொழில்நுட்ப உதவியாளர் –இளங்கலை லேப் டெக்னீசியன் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
லேப் டேங்கனீசியன் –டிப்ளமோ லேப் டெக்னீசியன் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர் –10ஆம் வகுப்பு முடித்து ஏதேனும் ஒரு மருத்துவ ஆய்வகத்தில் ஒருவருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :
ரூ.18,000/- முதல் ரூ.1,12,400/- வரையில் தகுதி பணி அனுபவம் அடிப்படையில் வழங்கப்படும்.
வயது வரம்பு :
தொழில்நுட்ப உதவியாளர் – 30.
லேப் டேங்கனீசியன் – 28.
ஆய்வக உதவியாளர் – 25.
அரசு இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்காணல் வாயிலாக தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பம் தொடங்கிய தேதி– 23 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி– 21 ஜூலை 2023.
விண்ணபக்கட்டணம் :
பொதுப்பிரிவினர் ரூ.300க்கு டிடி எடுக்க வேண்டும்.
SC/ST பிரிவினர் பணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை :
ICMR-NIMR அதிகாரபூர்வ தளமானnimr.org.inக்கு செல்ல வேண்டும்.
அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் எந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, அதற்கான நகலை சேர்த்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் பணியமர்த்தப்படுவர்.
