CBHFL ஆட்சேர்ப்பு 2024: தலைமை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கவும்.!
CBHFL: பிரபல ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் மும்பையில் உள்ள அதன் கார்ப்பரேட் அலுவலகத்தில், சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (CBHFL) தலைமை இடர் அதிகாரி பதவிக்கான காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆனது இந்திய மத்திய வங்கியின் துணை நிறுவனமாகும். இங்கு குடியிருப்பு வீடுகள், அடுக்குகள் கட்டுமானம் வாங்குதல், டாப்-அப் கடன், அடமானக் கடன் அனைத்திற்கும் நிதி அளிக்கிறது.
READ MORE – SCCL ஆட்சேர்ப்பு: மொத்தம் 272 காலியிடம்…டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை.!
இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதிகாரப்பூர்வ இணையதளமான cbhfl.com மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.
பணியின் விவரம்
தலைமை இடர் அதிகாரி (CRO) – மேலாளர்
காலியிடங்கள்
01
இடம்
மும்பை
கல்வி தகுதி
டிப்ளமோ மற்றும் டிகிரி (ரிஸ்க் மேனேஜ்மென்ட் கோர்ஸ்)
அனுபவம்
ரிஸ்க் மேனேஜ்மென்ட் பகுதியில் அதாவது HFCகள்,வங்கிகள்,நிதி நிறுவனங்கள், NBFCகள், தொழில்நுட்ப நிறுவனங்களில் மேனேஜர் பதவியில் 3 வருட அனுபவம் வேண்டும்.
READ MORE – இன்னும் மூன்றே நாட்கள் தான்…இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள்!
இந்த பதிவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். ஆப்லைன் மூலமாக தங்களது விபரங்களை அனுப்புவதற்கு கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி
சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் அலுவலகம்,
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா கட்டிடம்,
எம்எம்ஓ, 6வது தளம்,
எம்ஜி சாலை, போர்ட் ஃப்ளோரா நீரூற்று , ஹுதமா சௌக்
மும்பை-400023.