திருச்சி NIT-யில் 60 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள்.. கல்வி தகுதி.. விண்ணப்பிக்க விவரம் இதோ...

திருச்சி NIT-யில் உதவி பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

NIT Trichy

திருச்சி NIT-யில் உதவி பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

திருச்சி என்ஐடி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணிகளுக்கு வேலைவாய்ப்புகளை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காலி பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 07ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..

பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :

உதவி பேராசிரியர் – 60.

பேராசிரியர் – 4.

கல்வித்தகுதி :

காலிப்பணியிட துறைக்கேற்ற முதுகலை பட்டம் மற்றும் Ph.D முடித்து இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) –குறிப்பிடப்படவில்லை.

வயது வரம்பு :

அதிகபட்ச வயது 35.

அரசு இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வு உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணல் வாயிலாக பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி– 07 ஜூலை 2023.

விண்ணபக்கட்டணம் :

பொதுப்பிரிவு – ரூ.2500/-

SC/ST பிரிவினருக்கு – ரூ.1250/-

வெளிநாட்டில் இருந்து விண்ணப்பிப்பவர்களுக்கு – ரூ.5,000/-

விண்ணப்பிக்கும் முறை :

NIT திருச்சி பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ தலமானrecruitment.nitt.eduக்கு செல்ல வேண்டும்.

அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து கணக்கு வைத்து இருப்பவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இல்லையெனில் புதிய கணக்கு தொடங்க லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர், ஆவணங்களை அடிப்படையில் பெயர், முகவரி, கல்வித்தகுதி பதிவிட்டு , அதற்கான ஆவணங்களை குறிப்பிட்ட அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வீண்ணப்பங்கள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அவர்கள் கொடுத்த தொலைபேசி, இணையதள முகவரி கொண்டு எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு பின்னர் பணியமர்த்தப்படுவர்.