அழைப்பு உங்களுக்கு தான்.! டிப்ளமோ, டிகிரி , இன்ஜினீரியங் முடித்தவர்களுக்கு சம்பளத்துடன் ஒருவருட வேலைப்பயிற்சி..,

எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி , இன்ஜினீரியங் முடித்தவர்களுக்கு சம்பளத்துடன் ஒருவருட வேலை பயிற்சிக்கான விண்ணப்பங்கள்

Job alert 2023

எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி , இன்ஜினீரியங் முடித்தவர்களுக்கு சம்பளத்துடன் ஒருவருட வேலை பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ராஜஸ்தானில் செயல்படும் டிவி , எல்இடி பல்புகள், எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் பகவதி நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி, பொறியியல் படித்தவர்களுக்கு 1 வருட சம்பளத்துடன் அப்பரன்டீஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு இம்மாத இறுதிக்குள் (30 – ஜூன் – 2023) விண்ணப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

காலிப்பணிகள்:

டிப்ளமோ, டிகிரி, பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு 1 வருட அப்ரண்டீஸ் பயிற்சி.

காலியிடங்கள் :

பொறியியல் பிரிவு :

இயந்திர பொறியியல் – 10.

மின் பொறியியல்- 10.

எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்- 80.

கணினி அறிவியல் & பொறியியல்- 10.

தகவல் தொழில்நுட்பம்- 10

பொது பட்டதாரிகள் (பொறியியல் அல்லாத பட்டதாரி)– 60.

டிப்ளமோ –70 (பல்வேறு பிரிவுகளில்)

கல்வித்தகுதி :

தேவைப்படும் பிரிவுகளில் இளங்கலை பொறியியல், டிப்ளமோ , ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

பொறியியல் அப்ரண்டீஸ் – ரூ.12,000/-

டிகிரி பிரிவு  – ரூ.11,000/-

டிப்ளமோ – ரூ.11,000/-

வயது வரம்பு –குறிப்பிடப்படவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணல் வாயிலாக பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி– 30 ஜூன் 2023.

விண்ணப்பிக்கும் முறை :

அரசு அதிகாரபூர்வ அப்ரண்டீஸ் தளமானportal.mhrdnats.gov.inக்கு செல்ல வேண்டும்.

அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் மாணவர் என குறிப்பிட்டு புதிய அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும்.

பின்னர் , உரிய ஆவணங்கள் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

வீண்ணப்பங்கள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அவ்ர்கள் கொடுத்த தொலைபேசி, இணையதள முகவரி கொண்டு அழைக்கப்படுவர்.