இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.! 12ஆம் வகுப்பு தகுதி போதும்.!

Indian Navy announced Agniveer Recruitments in all over india totally 1365 posts

navy agineveer recriutment

இந்திய கடற்படையில் அக்னிவீரர் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம், கடற்படை, விமான படைகளுக்கு 4 வருடம் குறுகிய கால ஒப்பந்தமாக ‘அக்னி வீரர்’ எனும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்புகளும் அவ்வப்போது வெளியாகி கொண்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் முப்படைகளின் சேரும் இளைஞர்களுக்கு 4 வருடங்கள் குறிப்பிட்ட பணிகள் கொடுக்கப்படும். அதன் பிறகு தேவைப்பட்டால் நிரந்தர பணி வழங்கப்படும்.

இந்த 4 வருட கால பணியாற்றியதை கொண்டு முப்படைகளில் சேர விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது இந்த திட்டத்தின் கீழ் கடற்படையில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த (மே) 29ஆம் தேதி வெளியாகியுள்ளது.

பதவி– கடற்படை அக்னிவீரர்.

காலியிடங்கள் –மொத்தமாக இந்தியா முழுக்க 1365 காலிப்பணியிடங்கள்.

கல்வித்தகுதி –குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்):

முதல் வருடம் – Rs. 30,000/.

இரண்டாம் வருடம்- Rs. 33,000/-

மூன்றாம் வருடம் – Rs. 36,500/-

நான்காம் வருடம் – Rs. 40,000/-

வயது வரம்பு –17 வயதிலிருந்து 23 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பணியிடம்  –இந்தியா முழுக்க பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு செய்யப்படும் முறை :

கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு.

உடற்தகுதி தேர்வு.

சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பக் கட்டணம் –550/- (குறிப்பிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டண சலுகை உண்டு)

விண்ணப்பம் தொடங்கிய தேதி– 29 மே  2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி– 15 ஜூன் 2023.

விண்ணப்பிக்கும் முறை :

இந்திய கடற்படை தளமானjoinindiannavy.gov.in-க்கு சென்று Join as Agniveer எனும் லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

அதனை தொடர்ந்து, Recruitment நோட்டீசை கிளிக் செய்ய வேண்டும். அதில் மேற்கண்ட பல்வேறு பணிகளுக்கான தரவுகள் இருக்கும் அதில் தேவையான குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் பெயர் , முகவரி உள்ளிட்ட அத்தியாவச தகவல்களை குறிப்பிட்டு அதற்கான உறுதியான ஆதாரங்களையும் பதிவேற்ற வேண்டும்.

இறுதியாக தேவை இருப்பின் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், இறுதி நகலை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பயனர்களின் இணையதள முகவரி மூலம் அழைக்கப்படுவர்.