சென்னை :தமிழ்நாடு துணிநூல் துறை சென்னையில் டிரைவர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான வேலை வாய்ப்பு குறித்து அறிவித்துள்ளனர். பணிக்கு எத்தனை காலியிடங்கள் இருக்கிறது எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்ற முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரார்கள் படித்துவிட்டு விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்.
காலியிடங்கள் விவரம்
பதவியின் பெயர்
காலியிடங்கள் எண்ணிக்கை
அலுவலக உதவியாளர்
7
டிரைவர்
2
கல்வி தகுதி
அலுவலக உதவியாளர், டிரைவர் பணிக்கு வேளைக்கு சேர்பவர்கள் 8-ஆம் வகுப்பு முடித்தவராக இருக்கவேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
அலுவலக உதவியாளர்
ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை
டிரைவர்
ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை
முக்கிய நாட்கள்
தொடக்க தேதி
18-07-2024
கடைசி தேதி
29-07-2024
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியில் வேளைக்கு சேர விருப்பம் உள்ளது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமானhttps://tntextiles.tn.gov.in/இணையதளத்திற்கு சென்று இந்த வேளை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
அப்படி இல்லை என்றால் கீழே விண்ணப்ப படிவம் குறித்து கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
பதிவிறக்கம் செய்து முடித்த பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முதலில் படிக்கவேண்டும்.
படித்து முடித்த பிறகு, தேவையான ஆவணங்களை வைத்து விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்.
பின் விண்ணப்பம் செய்து முடித்த படிவத்தை கடைசி தேதியான 29-07-2024க்கு முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.
முகவரி
ஜவுளி ஆணையர் அலுவலகம், 34 கதீட்ரல் கார்டன் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600034
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
க்ளிக்
விண்ணப்ப படிவம்
க்ளிக்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
க்ளிக்
