10ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ முடித்திருந்தால் மத்திய அரசின் ICMRஇல் டேங்கனீசியன் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ICMRஇல் லேப் டெக்னீசியன் பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 05-ஜூலை-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..
பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :
லேப் டெக்னீசியன் – 35 காலிப்பணியிடங்கள்.
ஆய்வக உதவியாளர் – 10 காலிப்பணியிடங்கள்.
ITI தொழில்நுட்ப உதவியாளர் – 23 காலிப்பணியிடங்கள்.
சம்பளம் விவரம் (மாதம் அடிப்படையில்):
லேப் டெக்னீசியன் – 19,000/- முதல்.
ஆய்வக உதவியாளர் – 18,000/- முதல் .
ITI தொழில்நுட்ப உதவியாளர் – 35,000/- முதல்.
தகுதி அனுபவம் அடிப்படையில் சம்பள விகிதம் மாறுபடும்.
வயது வரம்பு (அதிகபட்சம்) :
லேப் டெக்னீசியன் – 28.
ஆய்வக உதவியாளர் – 25.
ITI தொழில்நுட்ப உதவியாளர் – 30.
அரசு இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பம் தொடங்கிய தேதி– 05 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி– 28 ஜூலை 2023.
விண்ணப்பிக்கும் முறை :
ICMR-இன் அதிகாரபூர்வ தளமானwww.jalma-icmr.org.inக்கு செல்ல வேண்டும்.
அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் எந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, பதிவேற்ற வேண்டும்.
அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் பணியமர்த்தப்படுவர்.
