சற்று முன்...இவர்கள் 2 அரசு கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் – கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

The Director of College Education has directed that Honorary Lecturers should work in 2 Government Colleges.

தமிழகத்தில் உள்ள 13 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 31 கௌரவ விரிவுரையாளர்கள் மறுஉத்தரவு வரும் வரை 2 அரசு கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

பணிப்பளுவின் அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் 2 அரசு கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் என  கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரண சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக,கௌரவ விரிவுரையாளர்களுக்கு அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“பணிப்பளு காரணமாக தமிழகத்தில் உள்ள  13 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 31 கௌரவ விரிவுரையாளர்களுக்கு அருகில் உள்ள அரசு கல்லூரிகளில் கூடுதலாக பணி ஒதுக்கப்பட்டுள்ளது.எனவே,இவர்கள் அனைவரும் மறுஉத்தரவு வரும் வரை இரு அரசு கல்லூரிகளிலும் பணியாற்ற வேண்டும்”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்...இவர்கள் 2 அரசு கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் – கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவு!