மாணவர்கள் கவனத்திற்கு...பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது!

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.

Engineering Counselling

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கி செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, முதல் நாளான இன்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உல் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

www.tneaonline.orgஎன்ற இணையதளம் வாயிலாக மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். மேலும், 3 கட்டங்களாக நடக்க உள்ள பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. பொறியியல் கலந்தாய்வுக்கு 1,78,959 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.