ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகள் இன்று நடைபெறுகிறது.!

JEE Advanced 2023

நாடு முழுவதும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் (JEE Advanced) தேர்வுகள் இன்று நடைபெறவுள்ளன.

இந்திய முழுவதும் இன்று ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகள் நடைபெறுது. காலை 9 மணி முதல் 12 மணி வரை முதல் தாள் தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வுகளும் நடைபெறவுள்ளன.

நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளான என்ஐடி, ஐஐடியில் சேர இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது. தாள் 1 காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், தாள் 2 பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடத்தப்படும். JEE main தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

JEE அட்வான்ஸ் தேர்வு:

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) பல்வேறு திட்டங்களில் சேர்க்கைக்காக ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு மாணவர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் JEE தேர்வை அதிகபட்சம் இரண்டு முறை முயற்சி செய்யலாம். தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் மட்டுமே நடைபெறும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்