தண்ணீர் பிரச்சினை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை-பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதனால் தமிழக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தண்ணீர் பிரச்சினையில் பல

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதனால் தமிழக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தண்ணீர் பிரச்சினையில் பல  உணவகங்கள் மூடப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகிவருகிறது.மேலும் பள்ளிகளும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிவருகிறது.

unknown node

இந்த நிலையில்  தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், தண்ணீர் பிரச்சினை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.குடிநீர் தட்டுப்பாடு உள்ள பள்ளிகளில் உரிய மாற்று ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதை பள்ளி நிர்வாகம் உறுதி  செய்த பின்பே அங்கீகாரம் வழங்கப்படுகிறது என்றும்  பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.