#Breaking:11 ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு அனுமதி ரத்து...!

Class 11 entrance exam admission canceled

11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளிகளே நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்வுகள் நடத்தப்படாமல் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை உள்ள அனைத்து மாணவர்களையும் தமிழக அரசு ஆல்பாஸ் செய்தது.

அதனை தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையின் அச்சுறுத்தல் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் இருப்பதால் மாணவர்களின் நலனைக் கருதி 12 ஆம் வகுப்பு தேர்வையும் ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்த கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் இருப்பதால் மாணவர்களின் நலனைக் கருதி 12 ஆம் வகுப்பு தேர்வையும் ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்ட நிலையில் 11 ஆம் வகுப்புக்கான ஆன்லைன் வகுப்புகளை ஜூன் 3-வது வாரத்தில் தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

அதனுடன் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.

அதில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-15% கூடுதலாக மாணவர் சேர்க்கை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் குறிப்பிட்ட பாடங்களுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் அந்தந்த பள்ளிகளே,தேர்வு வைத்து 11 ஆம் வகுப்பு சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,11 ஆம் வகுப்பு  மாணவர் சேர்க்கைக்கு பள்ளிகள் நடத்தும் நுழைவுத் தேர்வானது ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதாவது,11 ஆம் வகுப்பு  மாணவர் சேர்க்கைக்கு பள்ளிகள் நடத்தும் நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புகள் அதிக அளவில் வந்ததால்,தேர்வை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.