அரசு பள்ளிகளில் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் மாணவர் சேர்க்கை

அரசு பள்ளிகளில் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு  நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு  நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வந்தது.இதனிடையே  அரசு பள்ளிகளில் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.