விதவிதமாக அபராதம் வசூலிப்பதை நிறுத்துக – இந்திய மாணவர் சங்கம் வேண்டுகோள்

இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் மாவட்ட செயலாளர் ஜாய்சன் தலைமையில் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி மற்றும்

இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் மாவட்ட செயலாளர் ஜாய்சன் தலைமையில் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி மற்றும் பதிவாளர் சந்தோஷ்பாபு ஆகியோரை சந்தித்து சான்றிதழ் திருத்தம் செய்யும் பணிக்கு ரூ. 500 வசூலிக்க கூடாது என்றும் ,தேர்வு கட்டணம் தாமதமாக செலுத்தும் மாணவர்களுக்கு அபராதமாக ரூ. 2000 வசூலிக்க கூடாது என்றும் , மறுமதிப்பீடு செய்வதற்கு ரூ. 800 வசூலிக்க கூடாது என்றும் ,காமராஜ் கல்லூரி கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த கோரியும் மனு அளிக்கப்பட்டது இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் சத்யா மாவட்ட து. செயலாளர் மாரி மாவட்ட து. தலைவர் கார்த்திக்கிளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் மனு பெற்று கொண்ட துணை வேந்தர் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்

unknown node