சென்னை மாநகராட்சி – பட்டியலினத்தவர்களுக்கு 32 வார்டுகள் ஒதுக்கீடு!

There are 32 wards allotted to those listed in the Chennai Corporation ward reservation.

சென்னை மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீட்டில் பட்டியலினத்தவர்களுக்கு 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 32 வார்டுகள் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பட்டியலினத்தை சேர்ந்த பெண்களுக்கு 16 வார்டுகளும், பொதுப்பிரிவு பெண்களுக்கு 84 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 32 வார்டுகளில் 16 வார்டுகள் பெண்களுக்கு என கூறப்பட்டுள்ளதுடன், போட்டியிடக்கூடிய 16 பட்டியலின பெண்களில் ஒருவருக்கு தான் மேயர் பதவி வழங்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.