#Breaking:பரபரப்பு...குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

#Breaking: Cottage Replacement Board building collapse!

சென்னை:திருவொற்றியூரில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் , அப்பகுதியில் பெரும் பரபரப்பு.

சென்னையின் திருவொற்றியூரில் அரிவாகுளத்து பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இதனால்,D பிளாக் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகின.

கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் மக்கள் நேற்று இரவே வெளியேறியதால் உயிர்சேதம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,தீயணைப்பு  மீட்பு பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,கட்டட இடிபாடுகளுக்கு இடையில்  யாரேனும் சிக்குயுள்ளனரா? என்று தேடி வருகின்றனர்.

மேலும்,காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனால்,இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.