பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. கார்கள், பைக்குகள், பேருந்துகள் சாலைகளில் மிதக்கின்றன. இதனால் பெங்களூருவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிழக்கு பெங்களூரு பாபுசபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடிக் கட்டடம், கனமழையால் இடிந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 17 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. […]
கடலூரில் கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்த இரண்டு சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு. கடலூர் மாவட்டம் வடக்கு ராமபுரம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டடம் ஒன்று இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். கடந்த 2013-ஆம் ஆண்டு இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது. கட்டிடத்தின் அருகில் சிறுவர்கள் அமர்ந்திருந்த போது விபத்து உள்ளாகியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சம்பவ […]
சென்னை:திருவொற்றியூரில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் , அப்பகுதியில் பெரும் பரபரப்பு. சென்னையின் திருவொற்றியூரில் அரிவாகுளத்து பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இதனால்,D பிளாக் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகின. கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் மக்கள் நேற்று இரவே வெளியேறியதால் உயிர்சேதம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,தீயணைப்பு மீட்பு பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,கட்டட […]
மதுரை கீழவெளிப் பகுதியில் இடிந்து விழுந்த 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டட விபத்திற்குக் காரணமான கட்டட உரிமையாளரை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்,கட்டட விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் சரவணன் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பயன்பாட்டில் இல்லாத பழமையான கட்டடங்களை ஆய்வு செய்து அவற்றை தரைமட்டமாக இடிப்பதற்கான நடவடிக்கையை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும்,மதுரை கீழவெளிப் […]
நெல்லை:பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் இருந்த நிலையில்,தற்போது கடந்த சில மாதங்களாகத்தான் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர். இதற்கிடையில்,பழமையான பள்ளிகளின் கட்டடம் குறித்து முறையாக ஆய்வு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில்,நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டடம் இடிந்து விழுந்ததில் எட்டாம் வகுப்பு […]