இன்றைய ராசி பலன்கள்.! உங்கள் ராசிக்கு இந்த நாள் எப்படி இருக்கும்..!
மாசி மாதம் 8ம் தேதி[ பிப்ரவரி 20, 2024] ராசி பலன்கள். இன்றைய நாளில் உங்களுக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.
மேஷம்:
இன்று அற்புதமான பலன்கள் கிடைக்கும். உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும். இன்று பல ஆச்சரியங்களையும் காணலாம். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும் .உங்கள் துணையின் மீது அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இன்று அதிர்ஷ்டமான பண வரவு ஏற்படும் .ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.
ரிஷபம்:
இன்று சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணிச்சுமை அதிகமாக இருக்கும் ,சக பணியாளர்களுடன் விவாதம் காணப்படும். உங்கள் துணையுடன் ஒரு விவாதத்தில் ஈடுபடுவீர்கள். இன்று பண இழப்புகளை சந்திப்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்:
இன்று எதிர்மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். பணியிடத்தில் பல தடைகள் வந்தாலும் குறித்த நேரத்தில் பணியை முடிப்பீர்கள். உங்களின் வித்தியாசமான அணுகு முறையை உங்கள் துணையுடன் வெளிப்படுத்துவீர்கள். இன்று பணம் செலவு செய்ய நேரிடும். பல் வலி ,சளி போன்ற உபாதைகள் ஏற்படலாம்.
கடகம்:
பதட்டம் காரணமாக சில சவுகரியங்களை இழப்பீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினால் நன்மை தரும். பணிகளை செய்வதில் திட்டமிட்டு செயல்படுங்கள் .உங்கள் துணையுடன் உறவில் மகிழ்ச்சி குறையும். உங்கள் குடும்பத்திற்காக பணம் செலவு செய்ய நேரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை ,உணவில் கவனம் செலுத்துவது அவசியம்.
சிம்மம்:
இன்றைய நாளை நீங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பீர்கள். இன்று ஊக்கத்தொகையும் சலுகையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் இனிமையாக பழகுவீர்கள். இன்று உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.
கன்னி:
இன்று எடுக்கப்படும் முக்கியமான முடிவுகள் மூலம் நல்ல பலன்களை பெறலாம். உங்களிடம் இன்று நகைச்சுவை உணர்வு காணப்படும். உங்கள் துணையுடன் காதல் உணர்வை வெளிப்படுத்துவீர்கள். குறித்த நேரத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள் உங்கள் கடினமான உழைப்பிற்கு இன்று ஊக்கத்தொகை கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது.
துலாம்:
இன்று அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும். உங்கள் முயற்சி தான் உங்களுக்கு புகழைப் பெற்றுத் தரும். இன்றைய நாளில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். இன்று உங்கள் துணையுடன் பேசுவதை தவிர்க்கவும். இன்று பணப்புழக்கம் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்:
இன்று பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதியாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பொழுதுபோக்கு நிகழ்வுகளில் கவனம் செலுத்துங்கள். இன்று பணியிடைச்சூழல் சிறப்பாக இருக்காது. உங்கள் மனக்குழப்பத்தை துணையிடம் காண்பிப்பீர்கள் இதை தவிர்க்கவும். நிதி வளர்ச்சியில் இன்று சில கட்டுப்பாடுகளை சந்திக்க நேரும் . இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு:
இன்று உங்கள் செயல்களை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். செய்யும் செயல்களில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. இன்று பணிகளை கையாள்வது கடினமாக உணர்வீர்கள். துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் எழலாம். பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த உடற்பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது.
மகரம்:
இன்று உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாளாகவும் இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று நிதி நிலைமை சிறப்பாக உள்ளது. உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கும்பம்:
புதிய தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்வதற்கு இன்று உகந்த நாள். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றி நற்பெயரை எடுப்பீர்கள் உங்கள் துணையுடன் நேர்மையான அணுகுமுறையை கொண்டிருப்பீர்கள். இன்று கணிசமான தொகையை சம்பாதிப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.
மீனம்:
இன்று சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது, முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் துணையுடன் குழப்பத்தை விட்டு தெளிவாக பேசுவதன் மூலம் நல்லுறவு ஏற்படும். இன்றைய நாளில் பணம் தேவைகள் அதிகமாக இருக்கும். இன்று சற்று பலவீனமாக உணர்வீர்கள்.