இன்றைய ராசி பலன்கள்.! ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்.!

Today horoscope-மாசி மாதம் 27ஆம் தேதி இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

horoscope 10

Today horoscope-மாசி மாதம் 27ஆம் தேதி[ மார்ச் 10, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உறவுகள் மற்றும்  பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார உயர்வு ஏற்படும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள், இன்று திருப்திகரமான நாளாக இருக்கும் .அதிஷ்ட எண் ஒன்று, அதிர்ஷ்ட வண்ணம் மாணிக்க வண்ணம்.

ரிஷபம்:

இன்று நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் மூத்தவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். பொருளாதாரத்தில் வளர்ச்சி காணப்படும் ,பணியிடத்தின் வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிர்ஷ்ட எண் 4 ,அதிர்ஷ்ட வண்ணம் பாக்கு வண்ணம்.

மிதுனம்:

இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. எதிர்பார்த்த காரியம் அமோகமாக நடக்கும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம் .அதிர்ஷ்ட என் 5 ,அதிர்ஷ்ட வண்ணம் மரகத வண்ணம்.

கடகம்:

இன்று நீங்கள் உஷாராக  இருக்க வேண்டும் .அமைதியை பின்பற்றுவது நல்லது. நீங்கள் சந்திக்கும் நபர்கள் கோபமாக இருக்க வாய்ப்புள்ளது. முருகனை வழிபாடு செய்வது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை, இரவில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும் .ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட எண் 9 ,அதிஷ்ட வண்ணம் அடர் சிவப்பு.

சிம்மம்:

இன்று வேலை வாய்ப்புகள் கிடைக்கும் .குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் .மாலை நேரத்திற்கு பிறகு அமைதியை கடைபிடிப்பது நல்லது .அதிர்ஷ்ட எண் மூன்று, வண்ணம் தேன் வண்ணம்.

கன்னி:

இன்று நீங்கள் வேலை வாய்ப்புக்காக சிபாரிசு தேட நல்ல நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதிர்ஷ்டமான எண் 4 ,அதிர்ஷ்ட வண்ணம் பாக்கு வண்ணம்.

துலாம்:

வாழ்க்கையின் கௌரவம் தான்  முக்கியம் என நினைப்பவர்கள் நீங்கள் ,இன்று சாதனை  படைக்கும் நாளாக இருக்கும். நட்பு வட்டாரம் பெருகும் ,மனக்குழப்பம் தீரும், பெண்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும் .அதிர்ஷ்ட எண் ஐந்து, அதிஷ்டமான வண்ணம் மரகத வண்ணம்.

விருச்சிகம்:

பணியிடத்தில் பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள மன கசப்பு விலகும். தன லாபம் பெருகும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. அதிர்ஷ்டமான எண் 1, அதிர்ஷ்ட வண்ணம் தாமரைப் பூ வண்ணம்.

தனுசு:

முயற்சி செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் .நீண்ட நாள் இருக்கும் வயிறு வலி தீரும் .மாலை நேரத்திற்கு பிறகு கவனமாக இருக்க வேண்டும், பூச்சி கடி தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அதிர்ஷ்ட என் இரண்டு ,அதிர்ஷ்ட வண்ணம் நீல வண்ணம்

மகரம்:

இன்று நீங்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்கவும், முக்கியமாக ஜாமின் கையெழுத்து போடுவதில் எச்சரிக்கையாக இருக்கவும். தனவரவு பெருகும் .புதிய தொழில் ஆரம்பிக்க நல்ல நாள். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாளை  வழிபாடு செய்யவும். அதிர்ஷ்ட எண் மூன்று, அதிர்ஷ்ட வண்ணம் தேன் வண்ணம்.

கும்பம்:

இன்று நீங்கள் சரஸ்வதி வழிபாடு செய்யவும். தன லாபம் பெருகும். எதிர்பார்த்த காரியம் நடக்கும். நிர்வாகத் திறன் நன்றாக இருக்கும் .ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்டமான எண் ஐந்து ,அதிஷ்ட வண்ணம் இலை பச்சை.

மீனம்:

இன்று உங்கள் வருமானம் பெருகும் நாள். பணியிடத்தில் இடமாற்றம் ஏற்படலாம் ,கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது ,உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. வியாபாரத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட எண் இரண்டு, அதிர்ஷ்ட வண்ணம் ஆரஞ்சு.