இன்றைய நாளின் (19.05.2022) ராசி பலன்கள்..! இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!
மேஷம்: இன்று மந்தமான நாளாக அமையும். உத்தியோகத்தில் ஒரு சில பயணங்கள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பொறுப்புகள் அதிகரித்து இருப்பதால் செலவுகள் கூடுதலாக இருக்கும். தலைவலி ஏற்படலாம்.
ரிஷபம்: இன்று நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். நீங்கள் உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி பெறலாம். உங்கள் துணையுடன் அன்பு குறைந்து பேசுவது போல் இருக்கும். அதனால் அன்பாக நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் இருக்கும்.
மிதுனம்: இன்று நீங்கள் உங்களின் சுய வளர்ச்சிக்கு உங்களை தயார் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை மும்முரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்துகொள்வதன் மூலம் நாளை சிறப்பாக்கலாம். இன்று பணவரவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.
கடகம்: இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க மிகச்சரியான நாள். மேலும் பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் வரும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கிய பாதிப்பு எதுவும் ஏற்படாது.
சிம்மம்: இன்று அனைத்தையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்ல பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் பரபரப்பாக இருக்க நேரும். கவனமாக பணிகளை செய்து முடிக்க வேண்டும். உங்கள் துணையிடம் அகந்தை உணர்வை வெளிப்படுத்துவீர்கள். பண செலவு ஏற்படலாம். முதுகு வலி ஏற்படலாம்.
கன்னி: இன்று கடவுள் வழிபாடு மேற்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் கவனமாக வேலைகளை செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். தலைவலி ஏற்படும்.
துலாம்: இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி நிச்சயம். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்: இன்றைய நாள் உங்களுக்கு மிக அனுகூலமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாகவும் அக்கறையுடனும் இருப்பீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தனுசு: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமைய ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள். உத்தியோகத்தில் பணிகளை கவனமுடன் செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணவரவு குறைந்த அளவு இருக்கும். பதட்டமாக இருப்பீர்கள்.
மகரம்: இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையாது. துணையிடம் எல்லா விஷயங்களிலும் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டாம். பணசெலவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.
கும்பம்: இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் பாராட்டு பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பாக இருப்பீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.