இன்றைய (23.03.2020)நாள்!எப்படி இருக்கு!?? ராசிபலன் இதோ!

இன்றைய (23.03.2020)நாள்!எப்படி இருக்கு!?? ராசிபலன் இதோ!

பஞ்சாங்கம்

இன்று (23.03.2020)திங்கள் கிழமை விகாரி வருடம், பங்குனி 10-ம் தேதி நல்ல நேரம்காலை 6.30 – 7.30மாலை 4.30 – 5.30ராகு காலம் 7.30-9.00எம கண்டம்10.30 – 12.00குளிகை1.30 – 3.00திதிசதுர்த்திநட்சத்திரம்பூரட்டாதிசந்திராஷ்டமம்மகம்,ஆயில்யம்யோகம்:சித்த / மரண யோகம்சூலம்:கிழக்குபரிகாரம்:தயிர்விசேஷம்:மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி தங்க சூரிய பிரபையில் பவனி.

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்:இன்று எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் செல்வ சேர்க்கை ஏற்படும். எதிலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுவீர்கள்.பயணத்தின் போது கவனம் தேவை.

.

ரிஷபம்:தொழிலில் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.  பண உதவி கிடைக்கும்.போட்டிகள் குறையும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நிலவி வந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.

மிதுனம்:பிரச்சனைகள் தீரும். தேங்கி கிடந்த பணிகளை  விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் தீரும்,மனதில் அமைதி ஏற்படும்.

கடகம்சலிப்பு நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மீது அக்கறை அதிகரிக்கும்.

சிம்மம்:இன்று மனம் மகிழும் சம்பவம் நடக்கும். எடுக்கும் முயற்சிக்கு  வெற்றி கிடைக்கும். பணவரவு கூடும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை தக்க பலன் அளிக்கும்.திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

கன்னி:எதிர்ப்புகள் விலகி வெற்றி கிடைக்கும் நாள். காரிய அனுகூலம் உண்டாகும். அனுபவ அறிவினால் திறம்பட செயல்பட்டு பாராட்டை பெறுவீர்கள்.மனகவலை தோன்றிய வண்ணம் இருக்கும்.விடுபட ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

துலாம்:இன்று மிக துணிச்சலாக சில முக்கய முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வாக்குவாதங்களை தவிர்த்து காரியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

விருச்சிகம்:உதவி என்று கேட்பவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். தொழிலில் கவனத்தோடு செயல்படுவீர்கள்.எடுக்கும் முயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும்.பணவரவு திருப்தி தரும்.

தனுசு:ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து இன்று முடிவெடுப்பீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டு திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து  செல்வது நல்லது.

மகரம்:மனதில் நிம்மதி இன்று  உண்டாகும் . பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.

கும்பம்:மனதில் இருந்த கவலைகள் எல்லாம் நீங்கி தைரியம் உண்டாகும்.தெளிவு பிறக்கும்.தொழிலில் லாபம் கிடைக்கும். பிரச்சனைகள் அகலும்.பெற்றோர் மீது பாசம் அதிகரிக்கும்.

மீனம்:திறமையாக பேசி காரியங்களை சாதித்து  காட்டும் நாள்.பயணங்களால் பலன் கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.