பஞ்சாங்கம்
இன்று (16.03.2020) திங்கள்கிழமை விகாரி வருடம், பங்குனி3-ம் தேதி நல்ல நேரம்காலை 6.30 – 7.30மாலை 4.30 – 5.30ராகு காலம் 7.30-9.00எம கண்டம்10.30 – 12.00குளிகை1.30 – 3.00திதிஅஸ்டமிநட்சத்திரம்கேட்டைசந்திராஷ்டமம்பரணியோகம்:சித்த யோகம்சூலம்:கிழக்குபரிகாரம்:தயிர்விசேஷம்:உப்பிலியப்பன் கோவிலில் ஸ்ரீஸ்ரீனீவாசப் பெருமாள் காலை திருப்பல்லக்கு.
இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
மேஷம்:யோசித்துச் செயல்பட்டு காரிங்களில் வெற்றி பெறுவீர்கள் அனைவரையும் அனுசரித்துச் செல்வீர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை பயணங்களை மாற்றியமைப்பது நல்லது.
ரிஷபம்:நண்பர்கள் தக்கசமயத்தில் கை கொடுத்து உதவும் நாள். பணத் தேவை பூர்த்தியாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வரன்கள் வாயிற்கதவை தட்டும். மாலைநேரம் மனக்குழப்பம் அகல இறைவழிபாட்டை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்:காரியங்களில் நம்பிக்கை அதிகரிக்கும்நாள். குடும்பப் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். புதிய முயற்சிகளில் ஆர்வம் கூடும். தொழில், வியாபார எதிர்பார்த்த லாபம் உண்டு.
கடகம்:உறவினர் மத்தியில் மதிப்பு கூடும் நாள் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவாகும். வீடு வாங்கும் சிந்தனை அதிகரிக்கும்.எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்:வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகி மகிழ்ச்சி காணும் நாள். உத்யோகத்தில் சகபணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினைள் அகலும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
கன்னி:வழக்கு விசாரணையில் திருப்பம் ஏற்படும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். இடம், பூமி வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சிக்கு வெற்றிகிடைக்கும். குடும்பத்தில் நிலவிவந்த சண்டை, சச்சரவுகள் அகலும்.
துலாம்:வைராக்கியத்தோடு செயல்படுவீர்கள்.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். உள்ளம் மகிழும் செய்தியொன்று உறவினர்கள் வாயிலாக வந்து சேரும்.
விருச்சிகம்:வெற்றி வாய்ப்புகள் வாயிற்கதவை தேடி வரும் நாள். எதிர்கால நலன் கருதி வைப்பு நிதியை வங்கிகளில் சேர்க்கும் எண்ணமானது உருவாகும். மேற்கொள்ளுக் பயணத்தால் பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
தனுசு:மற்றவரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் எல்லாம் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.பங்குதாரர்களிடம் கவனம் தேவை.திட்டமிட்டவாறு காரியங்கள் நடைபெறும்.
மகரம்:வரவானது இருமடங்காக கைக்கு வந்து சேரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் மாற்றம் செய்யலாமா? என்ற எண்ணம் மேலோங்கும். பிரச்சணைகள் ஏற்பட்டு அகலும்.
கும்பம்:கடந்த சில நாட்களாகவே வாட்டிவந்தமனச்சுமைகள் குறையும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்:முன்னேற்றம் அதிகரிக்கின்ற நாள். கடந்த 2 நாட்களாக வராமல் இருந்த பணவரவு இன்று கைக்கு கிடைக்கலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.