பஞ்சாங்கம்
வியாழகிழமை( 05.03.2020) விகாரி வருடம், மாசி 22ம் தேதி இன்று நல்ல நேரம்காலை10.30 – 11.30மாலை4.30 – 5.30ராகு காலம்1.30 – 3.00எம கண்டம்6.00 – 7.30குளிகை9.00 – 10.30திதி:தசமி நட்சத்திரம் : திருவாதிரை சந்திராஷ்டமம் :கேட்டை
யோகம்:சித்த யோகம்,சூலம்:தெற்கு,பரிகாரம்:தைலம்,இன்றையவிசேஷம்: ஸ்மார்த்த ஏகாதசி. காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் ரதோற்ஸசம்,முகூர்த்ததினம்.
இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
மேஷம்:நண்பர்கள் வழியாக நல்ல தகவல் கிடைக்கும் நாள். பண நெருக்கடி அகலும். ஊக்கத்தோடு செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
ரிஷபம்:முன்னேற்றம் காணும் நாள். காசு, கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். நீண்ட நாளைய ஆசையொன்று இன்று நிறைவேறும்.
மிதுனம்:பேச்சால் மற்றவர்களை கிரங்கடித்து விடுவீர்கள் .குடும்பத் தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.மனமகிழ்ச்சி காணும்.
கடகம்:இடமாற்றம் குறித்த இனிய தகவல் வந்து சேரும்.இல்லத்திற்கு விருந்தினர் வருகை ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழித் தகவல் வழிகாட்டும்.
சிம்மம்:ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். உத்யோகத்தில் எதிர் பார்த்த பதவி உயர்வுகள் வந்துசேர வாய்ப்புள்ளது.
கன்னி:மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மனதிற்கு இனியவர்களை சந்தித்து மகிழ்ச்சி காண்பீர்கள்.திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டவாறு செயல்படுத்தி காட்டுவீர்கள்.
துலாம்:சொல்லும் சொல் வெல்லும் சொல்லாக மாறுகின்ற நாள். நெருங்கியவர்களோடு நீடித்துவந்த பிரச்சினை அகலும். தெளிவு பிறக்கும்.புதிய முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும்.
விருச்சிகம்:ஆசைகள் நிறைவேறும் நாள். ஆலய வழிபாடு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வீர்கள்.வரன்கள் நழுவி செல்லும்.
தனுசு:மற்றவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சியை பெறுவீர்கள். மங்கல நிகழ்ச்சி மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது. லை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்:தன்னம்பிக்கையானது அதிகரிக்கும் நாள். ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் தானாக விலகும். மனத்திற்கு பிடித்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுக்கள் எல்லாம் நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம்:கனவுகள் எல்லாம் நிஜமாகும் நாள். தொட்ட காரியம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகி செல்வர். சொத்துக்களில் நிலவிய வில்லங்கங்கள் அகலும். திருமணப் பேச்சுக் கள் முடிவாகும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தமடைவீர்கள்.
மீனம்:திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைத்து மகிழும் நாள். தாய்வழி தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி குறித்து ஆர்வம் காட்டுவீர்கள்.வரன்கள் வாயில் கதவைத்தட்டும்.மனத்திற்கு இனியவர்களோடு நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.