உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்? இன்றைய ராசி பலன்கள்!
Today horoscope-பங்குனி மாதம் 1 ம் தேதி [மார்ச் 14 , 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.
மேஷம்:
இன்று மனதில் தேவையற்ற கவலைகள் ஏற்படும். உங்கள் வேலையில் கவனத்துடன் செய்வது நல்லது. உங்கள் துணையுடன் தேவையில்லாத உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. இன்று பண இழப்புகள் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்:
இன்று நீங்கள் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் .பணிகளை திட்டமிட்டு செய்வது அவசியம். உங்கள் துணையுடன் உங்கள் துயரங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை ,குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும்.
மிதுனம்:
இன்று நடப்பதை எல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும், உங்களுக்கு புதிய வேலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று நிதி நிலைமையில் வளர்ச்சி காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்:
நீங்கள் இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள் ,தொலைதூரத்தில் இருந்து நற்செய்திகள் வரும் .வேலை சம்பந்தமாக பயணங்கள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் மிகவும் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று தாராளமான பண வரவு இருக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க எதையும் லேசாக எடுத்துக் கொள்ளவும்.
சிம்மம்:
ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு அமைதியை தரும். இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வேலையில் கவனத்துடன் செய்ய வேண்டும், உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இன்று பணம் விரயமாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி:
இன்று உங்கள் செயல்களில் திருப்தி அடைவீர்கள், மற்றவர்களிடம் பேசும் போது கவனத்தை கையாளவும். உங்கள் பணியில் சில தடைகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் நீங்கள் காட்டும் அன்பு அதிருப்தியை உருவாக்கும். இன்று செலவுகள் ஏற்படலாம் ,ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
துலாம்:
இன்று நீங்கள் சில அதிர்ஷ்டங்களை எதிர்பார்க்கலாம், உங்கள் பணிகளில் மேல் அதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பீர்கள். உங்கள் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு ஏற்படும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்:
இன்று முன்னேற்றமான நிலையை காண்பீர்கள். பணியிடத்தில் சக பணியாளர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையுடன் நட்பு முறையுடன் அணுகுவீர்கள். நிதி நிலைமை உங்களுக்கு சாதகமாக உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு:
இன்று உங்கள் மனதில் தேவையற்ற கவலைகள் காணப்படும். பணியிடச் சூழல் சற்று கடுமையாக இருக்கும், கவனமுடன் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் தவறான புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலைமை உங்களுக்கு சாதகமாக இல்லை ,பண இழப்பு ஏற்படலாம் .ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நேரத்திற்கு உணவை உட்கொள்ளவும்.
மகரம்:
இன்று உங்கள் வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அதிக பணிகள் காணப்படுவதால் தவறுகள் நேரலாம். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு இருக்காது. செலவுகள் அதிகமாக ஏற்படலாம். பதட்டம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கும்.
கும்பம்:
இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்க திட்டமிட்டு செயல்படவும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தினால் வெற்றி காணலாம் .உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படலை தவிர்க்க வேண்டும். இன்று கூடுதல் செலவுகள் ஏற்படலாம். அஜீரண கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம்:
உங்கள் செயல்களில் வெற்றி பெற சிறந்த திட்டமிடல் வேண்டும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வாய்ப்புள்ளது .உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். இன்று பணவரவில் அதிர்ஷ்டமான நாள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.