#Breaking:சென்னை அழைத்து வரப்பட்ட யூ-டியூபர் மதன்...!

YouTuber Madan has now been brought to Chennai by the Personal police

பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்ட,யூ-டியூபர் மதன்,தற்போது தனிப்படை போலீசாரால் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.

பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் தேடப்பட்டு வந்த,யூ-டியூபர் மதன்,தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது,தனிப்படை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில்,யூ-டியூபர் மதனின் 2 சொகுசு கார்கள்,3 லேப்டாப் மற்றும் ஒரு ட்ரோன் விமானத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்ததால் மதனின் வங்கிக்கணக்கையும் போலீசார் முடக்கினர்.

இந்நிலையில்,மதனை தருமபுரியில் இருந்து தனிப்படை போலீசார் தற்போது சென்னை அழைத்து வந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,மதனிடம் விசாரணை நடத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.