#Breaking: சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி..!

Sivashankar Baba has been admitted to Chengalpattu Hospital due to ill health.

சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து, சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவர, அவர் வெளிநாடுகளுக்கு தப்பிசெல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பினர்.

பின்னர், தமிழ்நாடு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக உத்தரகண்ட் சென்றனர். டேராடூன் மருத்துவமனையில் இருந்த சிவசங்கர் பாபா சிபிசிஐடி வருவதை அறிந்து மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். பின்னர், நேற்று முன்தினம் சிவசங்கர் பாபாவை  டெல்லி காசியாபாத்தில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவரை டெல்லி சாகேத் நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தினர்.

இதனால், சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து செல்ல டெல்லி சாகேத் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன்காரணமாக,சிவசங்கர் பாபாவை இரவோடு இரவாக, விமானம் மூலம் சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். நேற்று சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து,சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டனர்.

இந்நிலையில்,சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.