சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இதனையடுத்து, சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவர, […]