யூ-டியூபர் மதன் தலைமறைவு – போலீசார் தீவிர நடவடிக்கை...!

Police are taking serious action to catch YouTuber Mathan who spoke obscenely about women

பெண்களை ஆபாசமாக பேசிய புகார் தொடர்பாக தலைமறைவாகவுள்ள யூ-டியூபர் மதனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை .

மேலும்,யூ-டியூபர் மதனின் வீடியோக்களை முடக்க யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு போலீஸ் பரிந்துரை.

யூ-டியூபர் மதன்,பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார்.பின்னர்,இந்த வீடியோக்களானது,வீடியோ கேம் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதன்மூலம் மதன் பிரபலமானார்.

இதனையடுத்து,யூ-டியூபர் மதன் ஆன்லைன் கேம் விளையாட்டின்போது பெண்களை ஆபாசமாகப் பேசியதாகவும் அவர் நடத்தி வரும் டாக்சிக் மதன் 18+ எனும் யூ-டியூப் சேனலில்,பெண்களை ஆபாசமாக பேசி 100 கணக்கான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,பெண்களிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலியல் ரீதியாக தவறாக பேசியதாகவும்,புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து,யூ-டியூபர் மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசில் பிரவீன் என்பவரால் புகார் அளிக்கப்பட்டது.

இதனால்,புகார் தொடர்பாக மதனை இன்று காலை சைபர் கிரைம் துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கூறி சைபர் கிரைம் போலீசார் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில்,யூ-டியூபர் மதன் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால்,அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிக்க,மொபைல் ஐபி (IP) முகவரி மூலமாக கண்டுபிக்க போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

ஆனால்,மதன் தனது வி.பி.என் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே வருவதாக சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,யூ-டியூபர் மதனின் வீடியோக்களை முடக்க யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமின் தலைமை அலுவலகத்திற்கு போலீசார் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல்,மதனை பிடித்து,போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.மேலும்,தலைமறைவாகவுள்ள மதனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.